கெட்கோ நில விவகாரம் தொடர்பில் லோட்டஸ் குழுமத்தைச் சேர்ந்த அதன் இரு உரிமையாளர்கள் மலேசிய லஞ்ச தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டனர்.
சிரம்பானில் உள்ள கெட்கோ நிலத்தை கொள்முதல் செய்த விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி அங்குள்ள மக்கள் ஏம்ஏசிசியிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரை தொடர்ந்து அதிரடி களத்தில் இறங்கிய எம்ஏசிசி இதற்கு முன்னர் நிலம் கொள்முதல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என அதன் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ சூல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் இவ்விரு உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
புத்ராஜெயாவிலுள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட இவ்விருவரும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். நாளை புத்ராஜெயாவிலுள்ள உயர்நீதிமன்றத்தில் இவ்விருவரும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட அந்நபர் இந்த நில கொள்முதல் விவகாரத்தில் இடைதரகராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment