கோலாலம்பூர்-
சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் டான்ஶ்ரீ முகம்மட் தாய்ப் மீண்டும் அம்னோவில் இணைந்துள்ளதில் என்ன சிறப்பு உள்ளது? என பெர்சத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேள்வி எழுப்பினார்.
அம்னோவின் முன்னாள் உதவித் தலைவருமான டான்ஶ்ரீ முகம்மட் தாய்ப் மீண்டும் அம்னோவில் இணைந்துள்ளதை ஏன் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பும் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடியும் இதனை பெரிய விவகாரமாக அடையாளப்படுத்த வேண்டும்?
இது உண்மையிலேயே டத்தோஶ்ரீ நஜிப் தனது கூட்டத்தை ஒன்றிணைப்பதை காட்டுகிறது. இது அவரது கூட்டம்.
மேலும், டான்ஶ்ரீ முகம்மட் தாய்ப் மீண்டும் அம்னோவுக்கே தாவியுள்ள செய்தியை கேட்டு 'அதிகம் மகிழ்ச்சி' கொள்வதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
2013ஆம் ஆண்டு அம்னோவை விட்டு விலகிய டான்ஶ்ரீ முகம்மட் தாய்ப் பாஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 2015ஆம் ஆண்டு பாஸ் கட்சியிலிருந்து வெளியேறி பிகேஆர் கட்சியில் இணைந்தார்.
No comments:
Post a Comment