'கெளரி லங்கேஸ் பத்திரிக்கே' எனும் சொந்த நாளிதழை நடத்தி வந்த மூத்தப் பத்திரிகையாளர் கெளரி லங்கேஸ் அடையாளர் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
55 வயதான இவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காரில் வீட்டுக்கு வந்திறங்கி உள்ளே நுழைய முற்பட்டபோது, மோட்டாரில் வந்த மர்ம நபர் , அரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். மர்பிலும், நெற்றியிலும் குண்டு துளைத்த நிலையில் கெளரி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இவர் இந்துத்துவாவுக்கு எதிராகவும், ரோஹின்யா மக்கள் மீதான வன்முறை பற்றியும், கோரக்பூர் குழந்தைகள் மரணம் பற்றியும் தனது பத்திரிகை வாயிலாக பல கடுமையான்ன விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
கெளரியின் மரணம் பத்திரிகையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு டெல்லியில் போராட்டம் நடத்தவிருப்பதாகவும்ம் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment