Friday, 15 September 2017

அடைமழை: வெள்ளக்காடானது பினாங்கு

சுகுணா முனியாண்டி
ஜோர்ஜ்டவுன் -
விடாது பெய்த அடைமழையின் காரணமாக பினாங்கு மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் பெய்ய தொடங்கிய அடைமழையைத் தொடர்ந்து ஜாலான் பி.ரம்பி கடுமையான  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. ஜோர்ஜ்டவுனின் பல சாலைகளில் கால் முட்டி முதல் மார்பளவு வரை வெள்ளம் ஏறியுள்ளது.
செபெராங் ஜெயாவிலிருந்து சுங்கை நியோர் செல்லும் சாலை, பெர்மாத்தாங், சுங்கை டூவா, மாக் மண்டின் ஆகிய முக்கிய சாலைகள் யாவும் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், கம்போங் மஸ்ஜிட், கம்போங் மக்காம், கம்போங் முத்தியாரா- பத்து பிராங்கி, ஜாலான் லங்காவி, ஜாலான் கெபுன் லாமா உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வெள்ளப் பேரிடரின் வீடியோ காணொளி:
கடுமையான மழையால் பாயா தெருபோங் பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பல வாகனங்கள் மிதக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment