சிம்மோர்-
சுமார் 100 ஆண்டுகளுக்கும் பழைமையான சிம்மோர் கந்தன் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலய வருடாந்திர தீமிதி திருவிழா வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஆலய திருவிழாவில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என ஆலய பொறுப்பாளர் ஆர். ஸ்ரீ ஹரி தெரிவித்தார்.
திருவிழா முதல் நாளான 15ஆம் தேதி பிற்பகல் 2.00 மணி தொடங்கி 12.00 மணி வரை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெறும்.
ஆகவே அம்மனுக்கு பால் குடம் ஏந்தி அபிஷேகம் செலுத்தும் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துமாறு கேட்டுக் கொண்ட அவர், திருவிழா அன்று மாலை 5.00 மணி அளவில் தீமீதி திருவிழா நடைபெறும் என அவர் கூறினார்.
திருவிழா அன்று ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஆலய நிர்வாகம் குறிப்பிட்ட விதிமுறைக்கு உட்ப்பட்டே நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும் எனவும் திருவிழாவின் போது நாடு தழுவிய நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திரளானவர்கள் கூடுவதால் அவர்களின் வசதிக்கேற்ப ஆலய நிர்வாகம் அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆலய திருவிழாவிற்க்கு நன்கொடை,பொருளுதவி வழங்க நினைக்கும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்தை தொடர்புக் கொள்ளுமாறு ஆலய ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான ஆர்.ஸ்ரீ ஹரி தெரிவித்தார்.
மேல்விபரங்களுக்கு: ஆர்.ஸ்ரீ ஹரி-0122195656,ஆர்.ஸ்ரீ தரன் -0125161778,முருகன் -0124700623
No comments:
Post a Comment