கோலாலம்பூர்-
சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசாரும் அம்னோவின் முன்னாள் உதவித் தலைவருமான டான்ஶ்ரீ முகம்மட் தாய்ப் மீண்டும் அம்னோவிம் இணைந்தார்.
அம்னோவில் இவர் மீண்டும் இணைந்துள்ளதை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் போராட்டம் அர்த்தமற்றது என அவர் உணர்ந்துள்ளதால் அம்னோவுக்கே திரும்ப முடிவு செய்து விட்டார். அதனால் அவர் பிகேஆரில் இருந்து விலகிக் கொண்டார் எனவும் அவர் அம்னோவுக்கு மீண்டும் திரும்பியுள்ளது கட்சியை வலுப்படுத்த உதவும் எனவும் அம்னோ தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார்.
2013இல் அம்னோவை விட்டு வெளியேறிய டான்ஶ்ரீ முகம்மட் தாய்ப், பாஸ் கட்சியில் இணைந்தார். 2015ஆம் ஆண்டு அக்கட்சியில் நிலவிய உட்பூசலைத் தொடர்ந்து பிகேஆர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment