புத்ராஜெயா-
மலேசியர்கள் வடகொரியா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
மறு அறிக்கை வெளியிடப்படும் வரை மலேசியர்கள் அந்நாட்டுக்கு பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா மேற்கொண்டு வரும் எறிகணை சோதனை நடவடிக்கையால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபையயில் ஒன்றுகூடிய உலக நாடுகளின் தலைவர்கள் பியாங்யோங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை சோதனைக்கு எதிராக முடிவெடுத்துள்ளனர்.
அந்நாட்டில் சகஜமான நிலை திரும்பும் வரையிலும் இந்த பயண தடை அமல்படுத்தப்படும் என வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை வடகொரியாவின் வான் எல்லைப்பகுதிகளில் அமெரிக்காவின் போர் விமானங்கள் பறந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இது குறித்து மேலும் விவரங்கள் பெற வேண்டுவோர் வெளியுறவு அமைச்சை +603-8008000 (அலுவலக நேரம்) அல்லது +603-88874570 (அலுவலக நேரத்திற்கு பின்) தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment