ரா.தங்கமணி
ஈப்போ-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜசெக தனது வேட்பாளரை நிறுத்துவதை குறை சொல்வதற்கு பிஎஸ்எம் கட்சிக்கு துளியளவும் உரிமை இல்லை என பேராக் மாநில ஜசெக துணைத் தலைவரும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.சிவகுமார் தெரிவித்தார்.
20 தொகுதிகளில் தங்களது கட்சி வேட்பாளரை களமிறக்குவோம் என முதலில் கூறியது பிஎஸ்எம் கட்சிதான். அவர்கள் தான் ஜசெகவின் தொகுதிகளில் போட்டிபோட எத்தனித்துள்ளனர்.
அதனால்தான் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளரை களமிறக்க ஜசெகவும் முனைந்துள்ளது. எங்களது தொகுதியில் பிஎஸ்எம் கட்சி போட்டியிடுவது அவர்களது உரிமையென்றால் அக்கட்சி வேட்பாளர் பிரதிநிதிக்கின்ற ஒரே நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளரை களமிறக்குவதும் எங்களது உரிமையாகும்.
ஆதலால் வரும் பொதுத் தேர்தலில் தகுதி வாய்ந்த வேட்பாளரை ஜசெக களமிறக்கும் என சிவகுமார் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment