ரா.தங்கமணி
சிம்மோர்-
கந்தன் கல்லுமலை ஶ்ரீ மஹா காளியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா நாளை சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று பால்குட அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பிற்பகல் 3.00 மணியளவில் பால்குட அபிஷேகம் தொடங்கப்பட்டது. ஆலய ஒருங்கிணைப்பாளர் ஒருவரான ஶ்ரீ ஹரி ஆலய பால்குடத்தை ஏந்தி அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இவ்வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கும் இவ்வாலயத்தின் திருவிழாவில் வெளிமாநிலத்தில் மட்டுமல்லாது வெளிநாட்டிலிருந்தும் திரளானவர்கள் வருகை புரிவர் என ஆலய ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஶ்ரீ தரன் தெரிவித்தார்.
நாளை நடைபெறும் ஆலய திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என அவர் சொன்னார்.
No comments:
Post a Comment