செபெராங் பிறை-
இடைவிடாத கனத்த மழை ஒரே நாளில் பெய்ததால்தான் பினாங்கில் வெள்ளம் ஏற்பட்டதற்கு முதன்மை காரணம். அதுவே பெருமளவு சேதத்தை விளைவித்து விட்டது என பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்தார் .
இந்த கனமழையால் பொதுவாக 74 விழுக்காடு அளவு மட்டுமே கொண்டிருக்கும் அணையில் 94 விழுக்காடு நீர் ஏற்றம் கண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக மத்திய அரசாங்கம் சுமார் 150 மில்லியன் வெள்ளி செலவில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் தீர்வு பிறக்கும் என மாநில அரசு நம்புவதாக செபெராங் பிறை அரேனா அரங்கில் நடைபெற்ற மலேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment