ரஷ்யாவைச் சேர்ந்த விர்சாவியா போருன் என்ற சிறுமி பிறந்ததிலிருந்தே அதிசய நோய்க்கு ஆளாகியுள்ளார். இந்த நோயின் தாக்கத்தினால் அவளின் இதயம் உடலுக்கு வெளியே வந்து துடிக்கிறது.
இதய பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சிறுமி இறந்துவிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதைத்தாண்டி சிறுமிக்கு 8 வயது ஆகியும் தற்போது உயிருடன் இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இருப்பினும், மிகவும் சந்தோஷமாகவும் திறமையான சிறுமியாகவும் சிறுமி வளர்ந்துள்ளாள். அவள் மிக மிருதுவான உடை மட்டுமே அணிய வேண்டும். அனைவரையும் போல் நடக்கலாம். ஆனால், மற்ற மாணவர்களை போல் ஓட முடியாது.
சிறுமியின் நோயை குணப்படுத்துவதற்கு அவளது பெற்றோர் பல மருத்துவர்களை அணுகியும் சிறுமிக்கு ரத்த அழுத்தம் அதிகம் இருப்பதால் சிகிச்சையின் மூலம் சரி செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், போருனின் தாய் தனது மகளுக்கு விரைவில் குணமடையும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
இதயம் வெளியே துடிப்பது போன்ற வீடியோவை சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
புதியதாக பிறக்கும் 1 மில்லியன் குழந்தைகளில் 6 பேருக்கு இந்த அதிசய நோய் தாக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment