கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் புதிய உதவித் தலைவர்களாக ஜசெகவைச் சேர்ந்த எம்.குலசேகரன், பிகேஆர் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டினா லியூ ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பக்காத்தான் ஹராப்பானின் உயர்மட்ட பதவியில் இந்தியர்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது என பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதன் விளைவாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நியமனத்தை இக்கூட்டணியின் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார். இக்கூட்டத்தில் பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் டத்தோ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், துணைத் தலைவர்கள் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், லிம் குவான் எங் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதற்கு முன்னர் குலசேகரன் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு தற்போது கிளந்தான் மாநில அமானா கட்சியின் தலைவர் டத்தோ ஹுசாம் மூசா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அவர் சொன்னார்.
பக்காத்தான் ஹராப்பானின் உயர்மட்ட பதவிக்கு இந்தியர்கள் நியமிக்கப்படாதது நியாயமற்றது எனவும் இந்தியர்களின் வாக்குகளை பெற இந்தியர் பிரதிநிதித்துவம் அவசியம் எனவும் சமூகப் போராட்டவாதியான டத்தோ எஸ்.அம்பிகாவும் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment