கோலாலம்பூர்-
அனைத்து
இன மக்களும் ஏற்கக்கூடிய மஇகா வேட்பாளர் பட்டியல்தான் தனக்கு தேவை. தரமான, நம்பகமான அந்த வேட்பாளரின் வெற்றியே மிக முக்கியமானது
என பிரதமர் டத்தோஶ்ரீ
நஜிப் துன் ரசாக் வலியுறுத்தினார்.
14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடும் தொகுதிகளை வென்றெடுக்க வேண்டியது
அவசியமாகிறது. அத்தகைய தொகுதிகளை வெல்ல வேண்டும் என்றால் இந்தியர்கள் மட்டுமல்லாது
மற்ற இனத்தவர்களின் ஆதரவையும் அவர்கள் பெற வேண்டும்.
வெற்றி
பெறக்கூடிய வேட்பாளர்களை களமிறக்கினால் மட்டுமே
வெற்றியை நிலைநாட்ட முடியும் என தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.
மஇகாவின் 71ஆவது பேராளர் மாநாட்டில் உரையாற்றியை டத்தோஶ்ரீ நஜிப், மஇகா வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை உருவாக்குவது அவசியமாகும்.
போட்டியிடக்கூடிய
ஒவ்வொரு தொகுதியிலும் இந்தியர்கள் மட்டுமே பெரும்பான்மையாக இருப்பதில்லை.
பிற இனத்தவர்களின் வாக்குகளை பெறக்கூடிய தகுதி வாய்ந்த வேட்பாளர்களை மஇகா தேர்வு
செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment