Wednesday, 20 September 2017

விஜய்க்கு பிறகு ரஜினி -அதிரடி காட்டும் முருகதாஸ்

நடிகர் விஜய்க்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை விரைவில் இயக்கவுள்ளார் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இது தொடர்பாக, அண்மையில் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொன்னதாகவும், அந்த கதை சூப்பர் ஸ்டாருக்கு ரொம்ப பிடித்துவிட்டதாகவும் முருகதாஸ் கூறியுள்ளார்.
ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் எனும் தனது நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறப்போவதாக ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்நிலையில், 'ஸ்பைடர்' படத்தைத் தொடர்ந்து அவர், விஜய் படத்தை இயக்குகிறார். அந்த படத்தின்  படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளது.

துப்பாக்கி', `கத்தி', படத்தை தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் விஜய்யின் 62-வது படம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்க இருக்கிறது.

ஜனவரியில் தொடங்கும் விஜய்-யின் படத்திற்கு அடுத்துதான் ரஜினியின் படத்தை இயக்கவிருப்பதாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment