நம்பிக்கைக் கூட்டணியின் உதவித் தலைவராக எம்.குலசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது வெறும் அரசியல் நாடகமே என பேராக் மாநில மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தின் ஆதரவை பெறுவதற்காக ஹிண்ட்ராஃப் அமைப்பை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்வதில் நம்பிக்கைக் கூட்டணி தோல்வி கண்டுள்ளதால் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மலேசிய இந்தியர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தேசிய முன்னணி அரசாங்கம் மட்டுமே முன்னணி வகிக்கிறது. மஇகாவின் மூலம் பல்வேறு சேவைகளை தேமு மேற்கொண்டு வருகிறது.
'நம்பிக்கைக் கூட்டணிக்கு இந்தியர்களின் உரிமைக்காக போராட முடியாது. தேமு மட்டுமே அதனை நிறைவு செய்யும். அதன் அடிப்படையிலேயே மலேசிய இந்தியர் பெருதிட்ட வரைவை அமல்படுத்தியுள்ளது.
'வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கே கிடைக்கும். ஏனெனில் எதிர்க்கட்சியினரை போன்று வெற்று வாக்குறுதிகளை மட்டுமே நாம் கொடுப்பதில்லை'.
நம்பிக்கைக் கூட்டணியில் உதவித் தலைவராக குலசேகரன் நியமனம் செய்யப்படுவதாக அதன் அவைத் தலைவர் துன் மகாதீர் அண்மையில் அறிவித்திருந்தார்.
நம்பிக்கைக் கூட்டணியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட குலசேகரனை அப்பதவியிலிருந்து நீக்கவே உதவித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனவும் அந்த பொருளாளர் பதவி அமானா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஹுசாம் மூசாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே இது ஓர் அரசியல் நாடகமே என பேராக் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ இளங்கோ தெரிவித்தார்.
No comments:
Post a Comment