Sunday, 3 September 2017

இழந்த தொகுதிகளை மீட்டெடுப்போம் - பேராக் மஇகா உறுதி

ரா.தங்கமணி
படங்கள்: புனிதா சுகுமாறன்

ஈப்போ-
கடந்த பொதுத் தேர்தல்களில் தோல்வி கண்ட தொகுதிகளில் மீண்டும் வெற்றி கொடி நாட்டுவோம். அதுவே தேசிய முன்னணிக்கு  பேராக் மஇகா  வழங்கும் வாக்குறுதி என பேராக் மாநில மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ சூளுரைத்தார்.

கடந்த 12, 13ஆவது பொதுத் தேர்தல்களில் மஇகா போட்டியிட்ட சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் தோல்வி கண்டது. இந்நிலை வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் திருத்தி அமைக்கப்படும்.
இம்மாநிலத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளை மீண்டும் வென்றெடுத்து மாநில ஆட்சியை தேசிய முன்னணி தக்க வைத்துக் கொள்வதற்கு அடித்தளம் அமைக்கப்படும் என இன்று ஶ்ரீ ஏகேஎஸ் மண்டபத்தில் நடைபெற்ற 71ஆவது பேராக் மஇகா மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றுகையில் இவ்வாறு கூறினார்.

13ஆவது பொதுத் தேர்தலில் மஇகா இம்மாநிலத்தில் 3 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட வேளையில் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட முயற்சித்து வருகிறது எனவும் அவர் சொன்னார்.
இம்மாநாட்டில் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர், மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், மஇகா துணைத் தலைவரும் பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி உட்பட மஇகா தலைவர்களும் பேராளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment