ஜோகூர் மாநிலம் விஸ்வரூபம் எடுத்த 'முஸ்லீம்களுக்கு மட்டுமே சலவை சேவை' சர்ச்சை தற்போது பெர்லிஸ் மாநிலத்தில் உருவெடுத்துள்ளது.
கங்கார், கம்போங் பக்காவில் கே-பார்க் வர்த்தக தளத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த துணி சலவை கடை, இங்கு முஸ்லீம்களுக்கு மட்டுமே சேவை வழங்கப்படும் என அறிவிப்புப் பலகை வைத்துள்ளது.
இது குறித்து கடையில் இருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அதன் உரிமையாளர் என்று கூறி கொண்ட நபர், அந்த சலவை மையம் முஸ்லீம்களுக்காகவே திறக்கப்பட்டதாகவும் இதனைச் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டாம் என்றும் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இச்செயல் குறித்து புலனம் வழி கருத்து தெரிவித்த பெர்லீஸ் மாநில முப்தி டத்தோ டாக்டர் முகம்ட் அஸ்ரி, தனக்கு பெர்லீஸ் இளவரசரிடமிருந்து உத்தரவு வந்ததாகவும் சலவை மையம் தொடர்பில் விசாரணை நடத்தும்படி கூறியதாகவும் அவர் சொன்னார்.
அண்மையில் மூவார், ஜோகூரில் நடைபெற்ற இச்சம்பவத்தை ஜோகூர் மாநில சுல்தான் வன்மையாக கண்டித்ததைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு மீட்டுக் கொண்டதோடு அதன் உரிமையாளர் அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment