ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்
நாட்டின் மாமன்னர் சுல்தான் முகமட் வி பிறந்தநாளில் 'ஏஎம்என்' விருது பெற்ற சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்துவுக்கு பிரபல தொழிலதிபர் டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல் சிறப்பு செய்தார்.
அண்மையில் இங்கு நடைபெற்ற விருந்துபசரிப்பு நிகழ்வில் டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல் இந்த சிறப்பு செய்தார்.
தொகுதி மஇகா தலைவர் மு.இளங்கோவன் பல்வேறு பொது அமைப்புகளிலும் செம்பிறை சங்கத்திலும் இணைந்து பல சமூகச் சேவைகளை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறம், கிளைத் தலைவர்கள் பெரியண்ணன்,கணேசன், கவிமன்னன், சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவர் எஸ்/லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment