டுவிட்டர் நிறுவனத்தின் செயலி தயாரிப்புத் துறையின் மூத்த இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஶ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது இந்திய வம்சாளிகளுக்குப் பெருமையை சேர்த்துள்ளது.
இதற்கு முன், ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, ஶ்ரீராம் தமது பணியில் அதிகாரப்பூர்வமாகச் இணைவார் எனக் கூறப்படுகிறது.
தாம் இந்த நிறுவனத்தில் பணியாற்றப் போவது குறித்து, ஶ்ரீராம் தமது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார். அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் வரவேற்பு பதில் டுவிட் செய்துள்ளது.
.
No comments:
Post a Comment