புக்கிட் மெர்தஜாம்-
பினாங்கு தமிழர் குரல் விளையாட்டுப் பிரிவு ,பினாங்கு இந்திய கால்பந்து சங்கம் ஏற்பாட்டில் தமிழர் குரல் கிண்ணம் கால்பந்துப் போட்டியில் அல்மா ரேஞ்சஸ் ஸ்போட் கிளப் குழு வெற்றி கிண்ணத்தை தட்டிச் சென்றது.
செபெராங் பிறை நகராண்மைக் கழக கால்பந்து அரங்கில் 2017ஆம் ஆண்டுக்கான இளையோர் தமிழர் கிண்ணம் இறுதிப் போட்டி நடைப்பெற்றது. மழை என்னும் பொருட்படுத்தாமல் வெற்றி எனக்கா …உணக்கா……என்ற நிலையில் இந்த இறுதி ஆட்டம் நடைப்பெற்றது. இதில் போட்டியில் அல்மா ரேஞ்சஸ் ஸ்போட் கிளப் குழு தாமான் மங்கா அணியுடன் மோதின.
ஆட்டத்தின் அரை இறுதி சுற்றுக்கு நெருங்கும் நேரத்தில் அல்மா தாமான் மாங்கா குழுவைச் சேர்ந்த சுரேஷ் ராவ் குழுவின் முதல் கோலை புகுத்தினார் ,
ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் இரு அணியினரின் ஆதரவாளர்களின் குரலொலியும் மேலோங்கின. போட்டியில் அரை இறுதி சுற்றின்போது அல்மா ஸ்போட் கிளப் அணியைச் சேர்ந்த சேமராஜ் குழுவின் முதல் கோலை செலுத்தி போட்டியை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
இரு குழுக்களும் சம நிலையை ஆட்டம் இறுதிவரை தக்கவைத்த நிலையில் இரு அணியினரிடையே பினால்டி வைக்கப்பட்டு அல்மா ஸ்போட் கிளப் அணி 3-0 என்ற கோல்கணக்கில் தாமான் மாங்கா அணியை வீழ்த்தி தமிழர் குரல் கிண்ணத்தை தட்டிச் சென்றது.,
3 மாதங்கள் 12 அணிகள் பங்குக் கொண்டு இறுதி சுற்றுக்கும் 4 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தாமான் மாங்கா அணி, அல்மா ஸ்போட் கிளப் அணி, எஸ்பி தி இந்தியர் அணி, தமிழர் எப்சி ஆகிய அணிகளாவர் .
அரை இறுதியில் போட்டியில் மோதிய எஸ்பி, தி இந்தியர் எப்ஏ 1க்கு 0 என்ற கோல்கணக்கில் தமிழர் எப்சி அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இக்கால்பந்துப் போட்டியில் அல்மா ஸ்போட் கிளப் அணி தமிழர் கிண்ணத்தை வென்று வெ. 2,000,வெற்றி கேடயம் ,பதக்கம் வென்ற நிலையில் இரண்டாம் நிலையில் கேடயம் பதக்கத்துடன் வெ.1, 000 வெள்ளி காசோலையை தாமான் மாங்கா அணி வென்றது. எஸ்பி தி இந்தியர் அணி வெ. 500, வெற்றி கேடயம் உட்பட தமிழர் எப்சி அணி வெ.300,வெற்றி கேடயம், பதக்கம் வென்று மூன்றாம், நான்காம் இடத்தை தக்கவைத்துக் கொண்டன.
இதுபோன்ற விளையாட்டு இந்திய இளைஞர்களிடையே சகோதரத்துவத்தையும் தலைமைத்துவம் போன்ற ஆக்கப்பூர்வமான முறையை விதைப்பதற்கு அஸ்திவாரமாக உள்ளது என்றும் அவர் கூறினார் .
இப்போட்டியில் சிறப்பு கோல்கீப்பராக அல்மா ஸ்போட் கிளப் அணியை சேர்ந்த ஆ.முனுசாமியும் சிறப்பு விளையாட்டாளராக தாமான் மாங்கா அணியைச் சேர்ந்த வி.சுந்தர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment