மாணவர்களின் பாதுகாப்பை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என கூறிய துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, நாட்டிலுள்ள ஒவ்வொரு சமயப் பள்ளியும் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்படாத சமயப் பள்ளிகளும் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன. அங்கு பயில்கின்ற மாணவர்களின் பாதுகாப்பை அரசாங்கம் விட்டுக் கொடுக்காது. நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரம் மாணவர்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானதாகும்.
அதோடு, சமயப்பள்ளிகளில் தீ தடுப்பு பாதுகாப்பு அம்சங்கள் முறையாக அமைக்கப்பட வேண்டும் என டத்தோ கிராமட்டில் தீ விபத்துக்குள்ளான சமயப் பள்ளியை பார்வையிட்டபோது உள்துறை அமைச்சருமான அவர் இவ்வாறு சொன்னார்.
இந்த தீச்சம்பவம் நம் நாட்டில் பதிவாகிய முதல் சம்பவம் கிடையாது. இதுபோன்ற இரண்டு, மூண்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சமயப்பள்ளிகள் அனைத்தும் மாநில நிர்வாகத்தின் கீழ் வருவதால் இப்பள்ளிகள் அனைத்தும் முறையாக செயல்படுவதை மத்திய அரசாங்கம் ஜாக்கிமிடம் உறுதி செய்து வருகிறது என அவர் கூறினார்.
No comments:
Post a Comment