ரா.தங்கமணி
ஈப்போ-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் சுயேட்சையாக போட்டியிடுவது தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் வலியுறுத்தினார்.
கேரமன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா போட்டியிடும் எண்ணத்திலிருந்து என்றுமே பின்வாங்காது. வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வேளையில் இத்தொகுதியில் நான் தான் போட்டியிடுவேன் என்றும் தேசிய முன்னணி அந்த வாய்ப்பை வழங்க தவறினால் சுயேட்சையாக களமிறங்குவேன் எனவும் டான்ஶ்ரீ கேவியஸ் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
சுயேட்சையாக போட்டியிடுவேன் என கூறுவது அவரின் தனிபட்ட கருத்தாகும். அது அவரையும் அவரது கட்சி உறுப்பினர்களையும் சார்ந்தது.
ஆயினும் டான்ஶ்ரீ கேவியஸ் தேசிய முன்னணியை சார்ந்துள்ள பங்காளி கட்சியின் தேசியத் தலைவர் எனும் முறையில் இத்தகைய அறிவிப்பு தேமுவுக்கு ஆரோக்கியமானதல்ல.
ஆதலால் இவ்விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், டான்ஶ்ரீ கேவியஸ் ஆகிய மூவரும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என இன்று பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவு பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்தபோது டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment