Monday, 18 September 2017

அம்னோவில் முகம்மட் தாய்ப்; விவாதிக்க அவசியமில்லை - டத்தோஶ்ரீ அஸ்மின் அலி

ஷா ஆலம்-

முன்னாள் உறுப்பினர் டான்ஶ்ரீ முகம்மட் தாய்ப் அம்னோவில் இணைந்தது குறித்து விவாதிக்க அவசியமில்லை என கெ அடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலின் தெரிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றுவதில் மட்டுமே  கட்சியின் முழு கவனம் உள்ளது.
'தனி நபர்கள் வரலாம்; போகலாம். எங்களுக்கு போராட்டம்தான் முக்கியமே தவிர போனவர்களை பற்றி கருத்துரைப்பதும் விமர்சிப்பதும் முக்கியமில்லை என அவர் கூறினார்.

பாஸ், பிகேஆர் கட்சிகளுக்கு பின்னர் மீண்டும் அம்னோவில் இணைந்துள்ளதாக சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் டான்ஶ்ரீ முகம்மட் தாய்ப் கூறியிருப்பது குறித்து கருத்து கேட்கையில் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment