Sunday, 3 September 2017

ஆதரவை உறுதிப்படுத்தினால் மட்டுமே அதிக தொகுதிகளை கோர முடியும்

ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன்

ஈப்போ-
மஇகாவுக்கு இந்திய சமுதாயத்தினரிடையே ஒற்றுமையும் வலுவான ஆதரவும் இருந்தால் மட்டுமே நமக்கான வாய்ப்புகளை நாம் அதிகப்படுத்திக் கொள்ள முடியும் என பேராக் மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ வ.இளங்கோ குறிப்பிட்டார்.

இந்தியர்களின் முதன்மை கட்சியான மஇகா இந்திய சமுதாயத்தின் ஆதரவை பெற்றுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
ஏனென்றால், இன்னும் ஆறு மாதங்களில் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பொதுத் தேர்தலில் அதிகமாக தேமு தலைமைத்துவத்திடம் கோர வேண்டுமென்றால் நமக்கான வலுவான ஆதரவை புலப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும்.
ஆதலால் நமக்கான ஆதரவை வலுப்படுத்துவதில் பேராக் மஇகா இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு ஆக்ககரமாக செயல்பட வேண்டும். அதுதான் நமக்கான வெற்றி வாய்ப்பையும் உறுதி செய்ய முடியும் என பேராக் மாநில மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவினரின் பேராளர் மாநாட்டில் சிறப்புரை ஆற்றுகையில் டத்தோ இளங்கோ இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment