கோலாலம்பூர்-
மலேசியாவில் சிறப்பான முறையில் இணையச் சேவை வழங்கப்பட்டுள்ளதால் அதிகமானோர் தகவல்கள், செய்திகள் உட்பட அனைத்து விவரங்களையும் இணையம் வழியே பெற்று வருகின்றனர் என தொடர்பு, பல்லூடகத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக் கூறினார்.
மலேசியர்களில் 86 விழுக்காட்டினர் சமூக வலைத்தளங்களின் மூலமாகவும், 54 விழுக்காட்டினர் தொலைக்காட்சி மூலமாகவும், 45 விழுக்காட்டினர் பத்திரிகை மூலமாகவும், 15 விழுக்காட்டினர் வானொலி மூலமாகவும் செய்திகளை பெற்று வருகின்றனர் என தி டிஜிட்டல் நியூஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
உலகத்தில் மலேசியாவில்தான் புலனம் (WhatsApp) வழி தகவல்களையும் செய்திகளையும் பறிமாறி கொள்கின்றனர். மலேசியர்கள் தகவல்களையும் செய்திகளையும் பரிமாறி கொள்வதற்கு 51 விழுக்காடு வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தி வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது
தகவல்களையும் செய்திகளையும் மலேசியர்கள் 65 விழுக்காடு தங்களின் கைப்பேசி மூலமாகவும் 45 விழுக்கட்டு கணினி மூலமாகவும் 18 விழுக்காடு கையடக்க கணினி மூலமாகவும் பெற்று வருகின்றனர் என தமது அகப்பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.
மற்றொரு நிறுவனமான டி.என்.எஸ். குளோபல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மலேசியர்களீல் 77 விழுக்காட்டினர் புலனம் வழியும் 41 விழுக்காட்டினர் முகநூல் குறுந்தகவல் வழியும் தகவல்கள் பெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
No comments:
Post a Comment