Wednesday, 20 September 2017

சோதனை மேல் சோதனை: 7.1 ரிக்டர் அளவில் மெக்சிகோவை உலுக்கியது நிலநடுக்கம்

மெக்சிகோ சிட்டி,

நிலநடுக்கப் பேரிடரில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி நடந்த சில மணிநேரங்களிலேயே மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலுக்கியதில்  நூற்றுக்கணக்கானோர்  பலியாகியுள்ளனர். கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இந்த மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டடங்கள் தரைமட்டமாகின.
அங்கு மீட்புப்பணிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதோடு மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 லட்சம் பேர் அவதிப்பட்டு வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் கடந்த 1985ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10,000 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தான் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது நிலநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே இந்த கோர பேரழிவு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர் என்பது நினைவு கூறத்தக்கது.

No comments:

Post a Comment