Friday, 22 September 2017

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வெ.400 நிதியுதவி- பினாங்கு அரசு அறிவிப்பு

ஜோர்ஜ்டவுன்,
பினாங்கு மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  400 வெள்ளி வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்தார்.

இந்த வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட 200 பேரும் 11 வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்தனர். கார் அல்லது வீடு சேதமடைந்தோருக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.


வரும் திங்கட்கிழமை இந்த நிதியுதவி விண்ணப்பப் பாரம் வெளியிடப்படும். ஆகையால், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் மாநில அரசு அலுவலகத்தில் இந்த பாரத்தை பெற்று விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டு கொண்டார்.

No comments:

Post a Comment