Sunday, 3 September 2017

பேராக்கில் 4 சட்டமன்றம், 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டி- மஇகா உறுதி

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத்  தேர்தலில் பேராக் மாநிலத்தில் இரு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 4 சட்டமன்றத் தொகுதிகளிலும்  ம இகா போட்டியிடும் என அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடந்த 12ஆவது பொதுத் தேர்தலில் மஇகா ஒரு சட்டமன்றத் தொகுதியை விட்டுக் கொடுத்தது. 13ஆவது பொதுத் தேர்தலில் 3 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது.

இச்சூழலில் 14ஆவது பொதுத் தேர்தலில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட எத்தனித்துள்ளது. அவ்வகையில் ஊத்தான் மெலிந்தாங், புந்தோங் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் மேலும் இரு தொகுதிகள் விவாதிக்கப்பட்டு வருகிறது.

சுங்கை சிப்புட், தாப்பா ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டியிடும் என டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment