Monday, 18 September 2017

39 சட்டமன்றத் தொகுதிகளுடன் பேராக் மாநில ஆட்சி - நம்பிக்கைக் கூட்டணி வியூகம்

ரா.தங்கமணி
ஈப்போ-
கைநழுவி போன பேராக் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றுவற்கு நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) புதிய வியூகம் அமைத்து வருகிறது.

59 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள பேராக் மாநிலத்தில் 39 தொகுதிகளை வென்றெடுக்க வேண்டும் என்ற இலக்கை வகுத்து பேராக் நம்பிக்கைக் கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தை கைப்பற்றிய எதிர்க்கட்சிக் கூட்டணி (மக்கள் கூட்டணி) 11 மாத கால ஆட்சிக்குப் பின்னர் கவிழ்க்கப்பட்டு மீண்டும் தேசிய முன்னணி ஆட்சியமைத்தது.

தற்போது தேசிய முன்னணி 31 இடங்களையும் எதிர்க்கட்சிக் கூட்டணி 28 இடங்களையும் கொண்டிருக்கும் சூழலில் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில்  பேராக் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு நம்பிக்கைக் கூட்டணி வியூகம் அமைத்து செயல்படுகிறது.

39 சட்டமன்றத் தொகுதிகளில் தங்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது என குறிப்பிடும் நம்பிக்கைக் கூட்டணியினர், இந்த தேர்தலில் பேராக் மாநில ஆட்சியை கைப்பற்றியே தீருவோம் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment