சென்னை-
தமிழக அரசியல் களம் தினந்தோறும் பரபரப்பைச் சந்தித்து வருகின்ற சூழலில் நடிகர் ரஜினிகாந்தின் புதுக்கட்சி அறிவிப்பு அந்த பரபரப்பை இன்னும் மெருகேற்றியுள்ளது.
தமிழக மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன் என்று கூறிய ரஜினிகாந்த், தன் அரசியல் வருகையை கடந்த மே மாதம் அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பிறகு பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
இதுகுறித்து பல்வேறு கருத்துப் பறிமாற்றங்கள், வாதங்கள், விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ரஜினியின் அடுத்த கட்ட ரசிகர் மன்ற சந்திப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பை வரும் அக்டோபர் இரண்டாம் வாரம் ரஜினி நடத்துவார் எனத் தெரிகிறது. இந்த சந்திப்பின்போது நிச்சயம் ரஜினி தனது அரசியல் கட்சியின் பெயரையும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
கட்சியின் பெயர், அதைப் பதிவு செய்யும் நடைமுறைகளை ஏற்கெனவே தமிழருவி மணியனின் ஆலோசனையுடன் தொடங்கிவிட்டார் ரஜினிகாந்த். இப்போது கட்சிக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறார். அடுத்த இரு வாரங்களில் இந்தப் பணிகளை முடித்துவிடுவார் ரஜினி என்கிறார்கள்.
No comments:
Post a Comment