கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில்
மஇகா 9 நாடாளுமன்றத்
தொகுதிகளிலும் 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் மஇகா
தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மஇகா போட்டியிடக்கூடிய தொகுதிகளையும் வெற்றி பெறக்கூடிய
வேட்பாளர்களையும் அடையாளம் காண்கின்ற நிலையில் அங்கு வெற்றியை நிலைநாட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
மஇகா வேட்பாளர் பட்டியல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள
போதிலும் இறுதி நேரத்தில் மாற்றங்கள் நிகழலாம் என மஇகா 71ஆவது பேராளர் மாநாடு தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு
கூறினார்.
இதனிடையே, கேமரன் மலை நாடாளுமன்றத்
தொகுதியில் மஇகா வேட்பாளரே களமிறக்கப்படுவார். அந்த தொகுதியை
மஇகா விட்டுக் கொடுக்காது எனவும் அவர் சொன்னார்.
No comments:
Post a Comment