சிரம்பான் -
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக மஇகா வேட்பாளர் பட்டியல் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது 4 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் போட்டியிடக்கூடிய தேசிய நிலையிலான வேட்பாளர்களுக்கு அடிமட்டம் வரையிலான ஆதரவை வழங்கி வெற்றி பெற செய்ய வேண்டும் என நெகிரி செம்பிலான் மாநில மஇகா 71ஆவது ஆண்டுக்கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
இதனிடையே, மஇகாவின் தொகுதிகளில் இதர தேமு பங்காளி கட்சிகள் போட்டியிடக்கூடுமா? என கேட்கப்பட்டபோது, இந்த விஷயத்தில் விவாதங்கள் பொதுவானது என அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மஇகா தேசிய தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன், மாநில மஇகா தலைவர் டத்தோ எல்.மாணிக்கம் உட்பட 400க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment