பெட்டாலிங் ஜெயா-
தண்ணீர் பருகும் குவளையில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் 'முஸ்லீம் - முஸ்லீம் அல்லாதோர்' என குறிப்பிட்டிருந்த உலு லங்காட்டிலுள்ள ஒரு பள்ளியின் நடவடிக்கைக்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இங்குள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் குவளையில் பதிக்கப்பட்ட அட்டையில் 'முஸ்லீம்- முஸ்லீம் அல்லாதோர்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட அந்த புகைப்படத்தை கண்டு பெற்றோரும் சமூக வலைத்தள பயனர்களும் தங்களது அதிருப்தியை கொட்டி தீர்த்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துரைத்த கல்வி துணை அமைச்சர் டத்தோ சோங் சின் வூன், தேசிய பள்ளிகளில் அனைவரும் மலேசியர்களே ஆவர். மதத்தை அடிப்படையாகக் கொண்டு சிறார்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டக்கூடாது என தெரிவித்தார்.
அதோடு சிலாங்கூர் மாநில கல்வி இலாகா இவ்விவகாரத்தை ஆராயும் என அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment