சென்னை-
நாட்டிற்கு
தலைவர்களை தேடாமல் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் வேண்டும் என தமிழ்த்
திரைபட நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரை தேடுகிறார்கள். பொதுப் பணி துறை
என்றால் பொறுப்பான என்ஜினீயர் அதற்கு தலைமை ஏற்க வேண்டும். சுகாதாரதுறை என்றால்
சிறந்த மருத்துவர் தான் அந்த துறைக்கு பொறுப்பு உடையவராக இருக்க வேண்டும்.
நான் ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரி தொடங்கினால் அது சிறப்பாக
இருக்கும் காரணம் எனக்கு நடிப்பு பற்றி தெரியும். இதுபோல் ஒவ்வொரு
துறையிலும் நிபுணத்துவம் உள்ளவர்கள் அமைச்சராக இருந்தால் நாட்டுக்கு நல்லது கிடைக்கும்.
படிக்காதவராக இருந்தாலும் காமராஜர் அற்புதமான மனிதர். தனி திறமை உள்ளவராக
இருந்தார். சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்களும் படிக்கவில்லை. என்றாலும் அவர்கள்
எதில் இருந்தார்களோ அதில் தங்கள் திறமையை நிரூபித்தார்கள்.
இன்று அது போன்ற தலைவர்கள் இல்லை. எனவே தலைவர்களை
தேடாமல் நிபுணர்கள் தேவை என்று தான் மக்கள் கருதுகிறார்கள். அது போன்ற நிலை
உருவாக வேண்டும் தொலைகாட்சி பேட்டியொன்றில்
கலந்து கொண்ட கமல்ஹாசன் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment