கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) தேர்தல் இயக்குனராக பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்மின் அலியின் தேர்தல் குழு பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் வலுபடுத்தப்படும் என இக்கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு தகவல் தொடர்பு, மக்கள் அணி திரட்டு குழுவின் தலைவராகவும் பிகேஆர் கட்சியின் மகளிர் தலைவி ஸுரைடா கமாருடின் இக்கூட்டணியின் மகளிர் தலைவியாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment