Friday, 11 August 2017

இன்று 'கண்ணாடி'யில் சாலை விபத்தின் விபரீதம்



இன்பமே இல்லாது துன்பம் நிறைந்த பல சவால்மிக்க வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 4ஆம் தேதி தொடக்கம் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201  “கண்ணாடி” நிகழ்ச்சி இடம்பெற்றது.

அந்த வகையில் இவ்வாரம் கண்ணாடி நிகழ்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தினால் தனது வாழ்க்கையை இழந்து படுத்தப் படுக்கையிலுள்ள கெடா மாநிலத்தின் கூலிம் பகுதியைச் சேர்ந்த  குமரவேல் கதையைக் கொண்டு வரவுள்ளது.


தற்போது, குமரவேலின் ஒரே மகள் ஆரம்ப பள்ளியில் மூன்றாம் ஆண்டு பயில்கிறார். வறுமையில் வாழும்  குமரவேல் குடும்பத்தை அவரின்  மனைவி தேவி தற்போது வழிநடத்தி வருகின்றார். அதுமட்டுமின்றி, ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய கணவரின் தாயாரையும் அவர் கவனித்து வருகின்றார்.

இக்குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை செய்ய விரும்புபவர்கள் இன்று  வெள்ளிக்கிழமை இரவு மணி 10 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201இல், 'ஆஸ்ட்ரோ கோ'வில் ஒளிபரப்பாகும் 'கண்ணாடி' நிகழ்ச்சியை மறவாமல் பாருங்கள். அவ்வாறு உதவ முன் வரும் கரங்கள் secretariat.nawem@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment