Sunday, 6 August 2017

அரசியல் பேதமில்லா எதிர்க்கட்சித் தலைவர்கள் - டத்தோஶ்ரீ சுப்ரா புகழாரம்



சுங்கை சிப்புட்-
மஇகா முன்னின்று நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் அரசியல் பேதம் பார்க்காமல் கலந்து கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் பெருந்தன்மை பிரமிக்க வைக்கிறது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

ஹீவூட் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை மஇகா ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில்  மஇகா, தேமு தலைவர்கள் மட்டுமல்லாது எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், சபாய் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.



மஇகா நிகழ்ச்சியாக இருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளில் அரசியல் பேதம் பார்க்காமல் இங்கு வருகை புரிந்திருக்கும் இந்த தலைவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனெனில் பள்ளிகளில் பயில்வது மஇகா வீட்டு பிள்ளைகளும் தேமுவை சார்ந்தவர்களின் பிள்ளைகளும் மட்டுமல்ல; எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளும் இந்த பள்ளியில் பயிலக்கூடும்.



எனவே, அரசியலையும் தாண்டி தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழி ஆகியவற்றின் வளர்ச்சிக்காக கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆக்கப்பூர்வ நடவடிக்கையை பாராட்டுகிறேன் என டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் புகழ்ந்துரைத்தார்

No comments:

Post a Comment