ரா.தங்கமணி
கோலகங்சார்-
மஇகா மட்டுமே இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் உரிமைக்குரலாக விளங்க முடியும். ஆதலால் இந்தியர்கள் மஇகாவை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது என ஈப்போ பாராட், செத்தியா பேராக் மஇகா கிளைத் தலைவர் டாக்டர் வ.ஜெயபாலன் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியினரால் இந்திய சமுதாயத்திற்கு எத்தகைய சேவையையும் வழங்க முடியாது. ஏனெனில் அவர்கள் பிறர் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டிருப்பதால் அவர்களால் எதையும் செய்ய முடியாது.
நானும் கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் இருந்தவன்தான். ஆனால் அங்கிருந்து இந்தியர்களுக்கு சேவையாற்ற முடியவில்லை. அதனால்தான் கடந்த ஜனவரி மாதம் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் முன்னிலையில் மஇகாவில் இணைந்தேன்.
எதிர்க்கட்சியில் இந்தியர்கள் இருந்தாலும் அவர்களால் இந்தியர்களுக்கு ஆக்ககரமான சேவைகளை வழங்க முடியாது. அவர்களும் நல்லவர்கள்தான். ஆயினும் அவர்களால் இந்திய சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியாது.
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் பல்வேறு கட்சிகளில் பரிணமித்திருக்கலாம்.
ஆனால் அனைத்து இந்தியர்களின் உரிமைக்குரலாக மஇகா மட்டுமே எதிரொலிக்கும் என அண்மையில் இங்கு கோலகங்சார் இந்தியர் சங்க கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றுகையில் டாக்டர் ஜெயபாலன் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment