Friday, 1 September 2017

ஜே.கே. மஹாவின் புதிய முயற்சி?


பாடகரும் பாடலாசிரியருமான ஜே.கே மஹா தனது அடுத்த படைப்பில் புதிய முயற்சியை எடுத்துள்ளார்.

தாரா ஹாவுஸ் தயாரிப்பில் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு காதல் பாடலாகும். இப்பாடலை ஜே.கே. மஹா எழுதி, பாடி இயக்கியுமுள்ளார்.

இந்தப் புதிய தனிப்பாடலின் தலைப்பு ‘கோபக்காரி’ என்று பெயர் சூடப்பட்டுள்ளது. இப்பாடல் தனிப்பாடல் மட்டுமில்லாது இப்பாடலில் மேலும் ஒரு சிறப்பும் ஆச்சிரியமும் இவரது இரசிகர்களுக்காக படைக்கப்படவுள்ளதாக பாடகரும் இயக்குநருமான ஜே.கே. மஹா கூறினார்.



கியுட்’, ஒரிஜினல் தி-செர்ட்’, என் அம்மா என் மகள், பாடல்களை இதுவரையில் சுயமாக வெளியீட்டுள்ளார். கலையாத காதல், செல்லம் நியடி, வைய்பி என் குல்ப்பி என்ற பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் கோபக்காரி பாடல் குறித்து அவ்வப்போது அவரது J K Maha DiamondDestiny எனும் முகநூல் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம்.

மலேசிய இசைத்துறையில் இப்பாடல் ஒரு மேல் கல்லாக இருக்கும் என்று ஏதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்பாடலுக்கு லுக்பெர்ன் இசையமைத்துள்ளர். இப்பாடலை பிலாக்பெப்பர்ஸ் ரெக்கோர்ட்ஸ் லெபல் வெளியீடு செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment