ஈப்போ-
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராக
பதிவு செய்தது தொடர்பில் பேராக் மாநில
தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என மாநில
மஇகா தலைவரும் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ வ.இளங்கோ தெரிவித்தார்.
வரும்
14ஆவது தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக ஊத்தான் மெலிந்தாங்
சட்டமன்றத் தொகுதிக்கு வாக்குரிமையை மாற்றினோம். ஆனால் அது ஏற்புடையதல்ல
என தேர்தல் ஆணையம் தீர்மானித்தால் அதற்கு
கட்டுப்படுகிறோம்.
ஆயினும் வாக்களிக்கும் தொகுதி மாற்றியது செல்லாது
என மாநில தேர்தல் ஆணையத் தலைவர் அறிவிக்க வேண்டுமே தவிர புகார் செய்த தரப்பினர் அல்லர்
என டத்தோ இளங்கோ கூறினார்.
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் 'ஆவி வாக்காளர்கள்' பதிவு செய்து கொண்டுள்ளனர் என அத்தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் புகார் செய்துள்ளனர்.
இதனையடுத்து நடைபெற்ற பொது விசாரணையில் டத்தோ இளங்கோ
உட்பட
120 பேர் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் வாக்களிக்க முடியாது
என முடிவு அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment