ஈப்போ-
இந்துக்கள் கொண்டாடும் பெருவிழாக்களில் விநாயகர் சதுர்த்திக்கும் முக்கிய இடமுண்டு. 'முதற்கடவுள்' என வணங்கப்படுகின்ற விநாயகப் பெருமானுக்கு 'சதுர்த்தி விழா' இன்று 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
விநாயகப் பெருமான் அவதரித்த நாளையே 'விநாயகர் சதிர்த்தி' என கொண்டாடுகிறோம். விநாயகப் பெருமான் குழந்தைகளின் கடவுள் எனலாம். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே உருவாக காட்சியளிக்கும் விநாயகப் பெருமான்,
வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் எளிமையான கடவுள் ஆவார்.
எளிமையான முறையில் வழிபட்டாலே நமக்கு அருளை வாரி வழங்குபவர்.
விநாயகர் சதுர்த்தியன்று அருவக்கு விருப்பமான அருகம்புல் மாலை, மோதகம், கொழுகட்டை, கரும்பு, இனிப்பு பலகாரங்கள் என பலவற்றை படையலிட்டு வணங்கி வழிபடுவர்.
இதனை முன்னிறுத்தியே பல கடைகள் தங்களது வியாபாரத்தை துரிதமாக செயல்படுத்துவர். ஈப்போ, லிட்டில் இந்தியா வளாகத்தில் உள்ள பூக்கடைகளில் அருகம்புல் மாலைகள் இப்போதே ஜொலிக்க தொடங்கிவிட்டன.
அதேபோன்று இந்தியர்கள் அதிகம் வாழ்கின்ற புந்தோங் வட்டாரத்திலும் இனிப்பு பலகாரங்கள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடியாப்பம் வியாபாரிகளின் கை பக்குவத்தில் கொழுகட்டை, மோதகம் ஆகியவை பரபரப்பான விற்பனைக்கு தயாராக உள்ளன.
No comments:
Post a Comment