அலோர்ஸ்டார்-
நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டர்) கெடா மாநில மஇகா துணைத் தலைவர் டத்தோ எஸ்.ஆனந்தன் பதவி ஏற்கவுள்ளார்.
இவர் செனட்டராக நியமனம் செய்யப்பட கெடா சட்டமன்றம் இன்று அவரை முன்மொழிந்தது.
ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் இரண்டு பேர் மேலவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
அவ்வகையில் இம்முறை கெடா மாநிலம் சார்பிலான செனட்டர் பதவி மஇகாவுக்கு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே டத்தோ ஆனந்தன் செனட்டராக பதவியேற்கிறார்.
தேசிய முன்னணியின் சார்பில் அம்னோ பிரதி ஒருவரும் மற்ற கட்சிகளின் பிரதிநிதியாக ஒருவரும் செனட்டராக நியமனம் செய்யப்படுவது வழக்கமாகும்.
No comments:
Post a Comment