Sunday, 13 August 2017

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் குலுங்கியது ஜோகூர்பாரு


ஜோகூர் பாரு-

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவான நிலநடுக்கம் உலுக்கியது.

இந்த நிலநடுக்கத்தால் ஜொகூர்பாருவிலுள்ள இரு கட்டடங்கள் குலுங்கின. இதில் தெப்ராவில்  உள்ள சுங்கத்துறை கோபுரமும் தம்போயில் உள்ள     உள்நாட்டு வருவாய் வாரிய கட்டடமும் இதில் குலுங்கின என ஜோகூர் தீயணைப்பு, மீட்பு இலாகாவின் பொது உறவு அதிகாரி முகமட் ரிடுவான் அக்யார் கூறினார்.

காலை 11.23 மணியளவில் இலாகா அதிகாரிகள் அவசர அழைப்பைக் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்தோம். ஆயினும் இவ்விரு கட்டடங்களும் பாதுகாப்பானதாக உள்ளது. இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கம் ஜோகூர் மட்டுமல்லாது மலாக்கா, சிலாங்கூரிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சேவில் கடந்த 2016 டிசம்பரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது குடியிருப்பை இழந்தனர்.

No comments:

Post a Comment