கிரீக்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலை பேராக் தேசிய
முன்னணி பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் ஒப்படைத்துள்ளது.
சரவாக்
மாநில தேர்தல், இடைத் தேர்தல்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்ட
வியூகங்களை பொறுத்து வேட்பாளர் பட்டியலை தர நிர்ணயம் செய்வதற்கு ஏதுவாக பிரதமர் ஒப்படைக்கப்பட்டுள்ளது
என பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் குறிப்பிட்டார்.
அந்தந்த
தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதை விட மக்களுக்கு பல்வேறு வகையில் மானியங்கள்
வழங்கி சேவைகளை முன்னெடுக்கும் தரப்பினரே வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை பிரதிநிதிப்பர்
என அவர் சொன்னார்.
இங்கு
கிரீக் தொகுதியின் அம்னோ பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்த பினர் செய்தியாளர்களிடம் பேசிய
டத்தோஶ்ரீ ஸம்ரி இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment