Friday, 18 August 2017

பேராக் இந்தியர் வர்த்தக சபையின் 80ஆம் ஆண்டு விழா

(ரா.தங்கமணி)
ஈப்போ-
பேராக் இந்தியர் வர்த்தக சபையின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்தியர் கலை, கலாச்சார விழாவையும் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று 18ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை காலை 10.00 மணிமுதல் இரவு 10.00 மணி வரை ஈப்போ, லிட்டில் இந்தியா வளாகத்தில் இந்நிகழ்வு  நடைபெறவுள்ளது. பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் திருமதி தங்கேஸ்வரி இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.


பேராக் மாநிலத்திலுள்ள இந்திய வர்த்தகர்களை ஒன்றிணைப்பதோடு இந்தியர் கலை, கலாச்சாரத்தை கட்டி காக்கும் நடவடிக்கையாகவும் இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது என பேராக் இந்தியர் வர்த்தக சபையின் தலைவர் எம்.கேசவன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சேலை அழகு ராணி போட்டி, ஓவியம் வரையும் போட்டி, கபடி விளையாட்டு போன்ற அங்கங்கள் இடம்பெற்றுள்ளது. அதோடு இன்று நடைபெறும் கலைநிகழ்ச்சியில் நாட்டில் புகழ்பெற்ற பாடகர் திலீப் வர்ர்மன் பங்கேற்கவுள்ளார். அவரோடு பிரபல கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

அதோடு இரண்டாம் நாள் இவ்வாண்டு 'பேராக் மாநிலத்திற்கு வருகை ஆண்டாக' அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில சுற்றுலா துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ நோனி சிறப்பு வருகை புரியவுள்ளார்.


மூன்றாம் நாள் நிகழ்வில் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரமுகர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவிக்கவுள்ளார்.

ஆதலால் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேசவன் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment