Tuesday, 15 August 2017

குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் தொடர்பு: 54 பேர் மீது குற்றச்சாட்டு


கிள்ளான் -

சிலாங்கூரிலும் பினாங்கிலும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் தொடர்புடைய 54 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சிலாங்கூரில் 33 பேர் மீதும் பினாங்கில் 21 பேர் மீது இந்த குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

கிள்ளான் நீதிமன்றத்தில் ஒரு பெண் உட்பட 33 பேர் குண்டர் கும்பல் நடவடிக்கையில் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டது. 23 முதல் 44 வயதுக்குட்ட இந்த இந்த 32 ஆண்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றப்பிரிவு 130V (1) குற்றம் சுமத்தப்பட்டது. அதேபோன்று 35 வயதுடைய பெண்மணி மீது குண்டர் கும்பல்களை வழிநடத்தியது தொடர்பில் குற்றப்பிரிவு 130W  குற்றம் சுமத்தப்பட்டது.

ஏனைய நான்கு பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படாமல் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் பினாங்கில் 17 வயது முதல் 57 வயது வரையிலான ஒரு சிறார் உட்பட 20 பேர் மீது குற்றச்சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 47 வயதுடைய இன்னொரு குற்றவாளி வலிப்பு நோய்க்காக பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் வடகிழக்கு மாவட்டத்தில்  கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜூலை 29ஆம் தேதி வரை குண்டர் கும்பல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இவ்விரு வழக்கின் அடுத்த விசாரணையை  கிள்ளான் நீதிமன்ற நீதிபதி சுஸானா ஹுசேனும் ஜோர்ஜ்டவுன் செஷன்ஸ் நீதீமன்ற நீதிபதி நோர்சலா ஹம்சாவும் செப்டம்பர் 14ஆம் தேதி செவிமடுக்கப்படும் என குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment