Thursday, 24 August 2017

35 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா வெ.1,000 நிதியுதவி

சுகுணா முனியாண்டி 

செபெராங் ஜெயா-
35 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா  1,000 வெள்ளி கல்வி நிதியுதவி ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகம்  வழங்கியது.

மிகவும் பிரசித்தி பெற்ற பிறை,  ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர்  ஆலயம் ஏற்பாட்டில் தேர்வு எழுதும் யுபிஎஸ்ஆர், பிடி3, எஸ்பிஎம் ,எஸ்திபிஎம் உட்பட பல்கலைக்கழக மாணவர்களுக்கும்  கல்வி சிறப்பு யாகம், முடிகயிறு கட்டும் நிகழ்வு நடைபெற்றது . இந்நிகழ்வில் சிறப்பு அங்கமாக  35  பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பு உதவிநிதியாக  1,000 வெள்ளி காசோலை வழங்கப்பட்டன.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல அரிய நடவடிக்கைகளை செய்து வரும் அதேவேளையில் இதுபோன்ற சிறப்புப் பிரார்த்தனைகளும் ஏற்பாடு செய்து வருகின்றன.

ஆலயம் தெய்வ வழிப்பாட்டுக்கு மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கும் சமுதாய தேவைகளுக்கும் சிறப்பாக சேவை செய்து வருகின்றனர் என்றால் அது மிகையாகாது .

ஆலய துணைத் தலைவர் டத்தோ   கோபாலகிருஷ்ணன், அவரின் துணைவியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.
சரஸ்வதிக்குரிய நாமாங்கள் யாகத்தின் போது ஓதப்பட்டபோது மாணவர்களும் ஆலய குருக்களோடு இணைந்து மந்திரங்களை உச்சரித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு முடிகயிறு கட்டப்பட்டு எழுதுகோல், கல்வி உபகரணப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன .
இந்நிகழ்வின் போது ஆலய பொறுப்பாளர்கள், பெற்றோர்கள். பொதுமக்கள் என திரளானோர் கலந்துக் கொண்டனர் .

No comments:

Post a Comment