Tuesday, 22 August 2017

'வேட்டை கருப்பர் ஐயா' 16 திரையரங்கை அதிரவைக்கவுள்ளது!


பிலாக் ஹண்டர்ஸ் ஜி.கேவின் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை டி சினிமா மாராஸ் வெளியீடு செய்கிறார்.

உள்ளூர் தயாரிப்பிலும் இயக்கத்திலும் பல பக்தி மற்றும் ஆன்மிக திரைப்படங்கள் வெளியீடு கண்டிருந்தாலும் முதல் முறையாக திரையராங்கிற்கு கொண்டு செல்வதற்காக சிறப்பான முறையில் படப்பிடிப்பு முடிந்து திரையரங்கில் வருகின்ற இம்மாதம் 24ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள 16 திரையரங்குகளில் வேட்டை கருப்பர் ஐயா பக்தித் திரைப்படம் வெளியீடு காணவுள்ளது.

பிலாக் ஹண்டர்ஸ் புரோடஷன் ஜி.கேவின் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் ஜி.கே, வீரா நடித்துள்ளனர். எமி கோஸ் சுகு இப்படத்தின் இயக்குனர் மட்டுமில்லாது இப்படத்தின் இசையமைப்பாளரும் என்பது குறிப்பிடதக்கது.

இத்திரைப்படத்தில் அகோதரன், நண்பா விஜேய், அலகேன்ரா, நகைச்சுவை நடிகர் சேம், எண்டி, இராஜ சூர்யா, பிரபா என்ற அமரன், அருண், விநோத், ஆர்.வி.சங்கர், கயாத்திரி என அதிகமனோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருக்கும் என்று ஏதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தை திரையரங்கில் கண்டு பயன்பெருமாரு வேட்டை கருப்பர் ஐயா திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகருமான ஜிகே தெரிவித்தார்.


மேலும், இத்திரைப்படத்தை பணம் சம்பாரிக்கும் நோக்கில் வெளியீடவில்லை. வேட்டை கருப்பர் ஐயாவின் தீவிர பக்தர் என்ற அடிப்படையிலும் அனைவருக்கும் அவரது மகிமையை பரப்பவும் இப்படத்தை தயாரித்து வெளியீடுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இப்படத்தை ஐயாவின் பக்தர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment