பெட்டாலிங் ஜெயா-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் கூடுதலாக 10 விழுக்காடு மலாய் வாக்காளர்களின் ஆதரவும் 5 விழுக்காடு சீனர், இந்திய வாக்காளர்களின் ஆதரவும் கிடைத்தால் தேசிய முன்னணியிடமிருந்து மத்திய அரசாங்கத்தை கைப்பற்ற முடியும் என நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) நம்பிக்கை கொண்டுள்ளது என ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
இத்தகைய ஆதரவு கிடைத்தால் தீபகற்ப மலேசியாவில் 113 நாடாளுமன்றத் தொகுதிகளை பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றக்கூடும் என பஹாவில் நடைபெற்ற கட்சி நிகழ்வென்றில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
13ஆவது பொதுத் தேர்தலோடு ஒப்பிடுகையில் 10% மலாய் வாக்காளர்கள் ஆதரவும் 5% விழுக்காடு சீனர், இந்தியர் வாக்காளர்களின் ஆதரவும் கூடுதலாக கிடைக்கப்பெற்றால் மிகப் பெரிய 'அரசியல் சுனாமி' ஏற்பட்டு மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றக்கூடும். இதன்மூலம் தேசிய முன்னணி, அம்னோவை புத்ராஜெயாவிலிருந்து வெளியேற்றப்படும் என்றார் அவர்.
கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங் மேலும் கூறுகையில், தீபகற்ப மலேசியாவில் உள்ள 165 நாடாளுமன்றத் தொகுதிகளில் 113 நாடாளுமன்றத் தொகுதிகளை பக்காத்தான் ஹராப்பான் வென்றெடுத்தால் தேசிய முன்னணி 50 தொகுதிகளையும் பாஸ் கட்சி இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை கைப்பற்றலாம்.
தேசிய முன்னணிக்கு சரிவு கண்ட 1% மலாய் வாக்காளர்கள் ஆதரவு 10%ஆக அதிகரித்தால் நம்பிக்கைக் கூட்டணி நிச்சயம் புத்ராஜெயாவை கைப்பற்றக்கூடும் என லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
No comments:
Post a Comment