சுங்கை
சிப்புட்,
சுங்கை
சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கவிருக்கும் வேட்பாளர் இறுதி நேரத்தில் தலை
காட்டாமல் முன்கூட்டியே தொகுதியில் களமிறங்கி சேவையாற்ற வேண்டும் என இத்தொகுதியின்
மஇகா தலைவர் இளங்கோவன் முத்து கூறினார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் வெகு விரையில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில்
வேட்பாளர் யார் என்ற விவகாரமே இங்கு பூதாகரமாக வெடிக்கிறது.
மஇகா
தேசியத் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அலங்கரித்த இத்தொகுதி கடந்த இரு தவணையாக
எதிர்க்கட்சி வசம் உள்ளது. இத்தொகுதியை மீட்டெடுக்க வேண்டும் என
பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால்
இத்தொகுதியில் களமிறக்கப்படும் வேட்பாளரை பொறுத்தே வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்படக்கூடிய
சூழல் உள்ளது. இத்தொகுதியை மீண்டும் தேசிய முன்னணி கைப்பற்ற வேண்டுமானால்
வேட்பாளராக களமிறங்குபவர் முன்கூட்டியே களமிறக்கப்பட வேண்டும்.
வேட்பாளரின்
சேவை பொறுத்தே இங்கு வெற்றி வாய்ப்பு
தீர்மானிக்கப்படும் சூழலில் வேட்பாளராக களமிறக்கப்படுவர் இங்கு
சேவை செய்து மக்களின் மனங்களை கவர வேண்டியது அவசியமாகும் என அண்மையில் இங்குள்ள விஸ்மா
அம்னோவில் நடைபெற்ற தொகுதி மஇகாவின் 24ஆம் ஆண்டு பொது கூட்டத்தில்
தலைமையுரை ஆற்றுகையில் இளங்கோவன் முத்து வலியுறுத்தினார்.
இந்த
கூட்டத்தில் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல், லிந்தாங் சட்டமன்ற உறுப்பினரும் தொகுதி அம்னோ தலைவருமான டத்தோ சூல்கிப்ளி,
தொகுதி மஇகா துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர்
கி.மணிமாறன், உதவித் தலைவர்கள்,
கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment